மீன்பிடி வலையில் சிக்கிய சாமி சிலை...!


மீன்பிடி வலையில் சிக்கிய சாமி சிலை...!
x
தினத்தந்தி 22 April 2022 9:45 PM IST (Updated: 22 April 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

உத்தரமேரூர் அருகே மீன்பிடி வலையில் சாமி சிலை சிக்கி உள்ளது.

உத்திரமேரூர், 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமம் வழியாக பாலாறு சென்று கொண்டிருக்கிறது.  திருமுக்கூடல் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் பாலாற்றில் மீன்பிடிக்க சென்றனர். 

அப்போது மீன்பிடி வலையில் சிக்கி தண்ணீரில் அடித்து வந்த ஒன்றரை அடி உயரமுள்ள குதிரை வாகனத்துடன் கூடிய சுவாமி சிலையை கண்டனர்.  இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்

பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சிலை தொடர்பாக விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story