ரமலான் பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் களைகட்டிய ஆட்டுச்சந்தை


ரமலான் பண்டிகையை  முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் களைகட்டிய ஆட்டுச்சந்தை
x
தினத்தந்தி 26 April 2022 3:58 PM IST (Updated: 26 April 2022 3:58 PM IST)
t-max-icont-min-icon

இன்று ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள அத்தியூர் ஆட்டுச்சந்தை களைகட்டியுள்ளது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். 

இதில் 5 ஆயிரம் ரூபாய் முதல் 22 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. காலை 4 மணிக்கு தொடங்கி 10 மணி வரை நடைபெற்ற சந்தையில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் இன்று ஒரே நாளில் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story