ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வள்ளியூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை...!


ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வள்ளியூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை...!
x
தினத்தந்தி 29 April 2022 4:00 PM IST (Updated: 29 April 2022 3:55 PM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் வாரச்சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் ஆடு மற்றும் கோழிகள் சந்தைகள் நடைபெறுவது வழக்கம். 

இந்த சந்தைக்கு நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் ஆடுகள், கோழிகள் வளர்ப்போர் என பலர் ஆடு மற்றும் கோழிகளை விற்பனை செய்யவும் வாங்கவும் வள்ளியூர் சந்தையில் கூடுவர். 

இந்த நிலையில் நெருங்கி வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் வாங்க வரும் வியாபாரிகள் மற்றும் மக்களின்  எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் சென்ற வாரம் 3 ஆயிரம் வரை விற்கப்பட்ட ஆடுகள் இன்று 6 ஆயிரம் வரை விற்பனையானது. 

மேலும் நாட்டுக் கோழிகள் ரூ.500-க்கும் சேவல்கள் ரூ.2 ஆயிரம் வரையும் விற்பனையானது. இதனால் இன்று மட்டும் குறைந்தது சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story