சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 2 பேருக்கு கொரோனா..!
சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர்களை தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.யில் நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதித்தோரின் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 301 பேருக்கு மேலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story