சட்டப்பேரவையில் நாளை கேள்வி நேரம் கிடையாது - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு


சட்டப்பேரவையில் நாளை கேள்வி நேரம் கிடையாது - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
x
தினத்தந்தி 6 May 2022 8:23 PM IST (Updated: 6 May 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

நாளை கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்றத்தில் நாளை சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, கவர்னர், அமைச்சரவை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக பேரவை கூடுகிறது. 

இந்த நிலையில் கேள்வி நேரம் இல்லாமல் நாளை பேரவையை நடத்த வேண்டும் என அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தார். இதையடுத்து நாளை கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். 

Next Story