முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு! புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு! புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 7 May 2022 8:10 AM IST (Updated: 7 May 2022 8:10 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை,

தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி  பொறுப்பேற்றுக் கொண்டார். 

பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று கலைஞர் நினைவிடம் செல்கிறார்.அதன்பின்னர் சட்டபேரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், பேரவை வளாகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

பேரவை தொடங்கியதும் நேரமில்லா நேரமாக எடுத்துகொள்ளப்படும்போது, அரசின் செயல்பாடுகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பேரவை நிகழ்வுகள் முடிந்த பின், முதல் அமைச்சர் அறிவாலயம் செல்கிறார்.

அங்கு திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களை பெற உள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றைய தினம் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story