ராமநாதபுரம்: கார் - பைக் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலி
தினத்தந்தி 8 May 2022 8:20 AM IST (Updated: 8 May 2022 8:20 AM IST)
Text Sizeராமநாதபுரத்தில் கார் - பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ராமேஸ்வரம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டிணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் இன்று காலை கார் - பைக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire