மயிலாடுதுறை-திருச்சி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மயிலாடுதுறை-திருச்சி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மயிலாடுதுறை-திருச்சி (வண்டி எண்:06413) இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் மயிலாடுதுறை-தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் தஞ்சாவூரில் இருந்து இன்று காலை 8.15 மணிக்கு புறப்படும்.
* மறுமார்க்கமாக திருச்சி-மயிலாடுதுறை (06646) இடையே இன்று காலை 7.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சாவூர்-மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
* மயிலாடுதுறை-திருச்சி (16233) இடையே இன்று காலை 8.15 மணிக்கு இயக்கப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றப்பட்டு 1¼ மணி நேரம் தாமதமாக காலை 9.30 மணிக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story