ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு செம்மரம் கடத்தல் - 7 பேர் கைது


ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு செம்மரம் கடத்தல் - 7 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 12:08 AM IST (Updated: 11 May 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஐதராபாத்,

ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குடிப்பாலா பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த வேனில் நடத்தப்பட்ட சோதனையில், செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த வேனில் இருந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மேலும் 2 கார்களில் செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. 

இதன் பின்னர் அடுத்தடுத்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையில் தமிழகத்தின் திருப்பத்தூரைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான 2,275 கிலோ எடை கொண்ட 85 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story