நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 5-வது நபரின் உடல் மீட்பு


நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 5-வது நபரின் உடல் மீட்பு
x
தினத்தந்தி 18 May 2022 7:36 PM IST (Updated: 18 May 2022 7:36 PM IST)
t-max-icont-min-icon

பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த 5-வது நபரின் உடலை பேரிடர் மீட்பு பணியினர் மீட்டுள்ளனர்.

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு நடந்த விபத்தில், அங்கு பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். இதில் முதல் நாளன்று 3 பேர் மீட்கபட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தொடர்ந்து மறுநாள், 4-வது நபரும் மீட்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் 5-வது நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு நீண்ட நேரமாக அவரது உடலை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றன. 

இந்நிலையில் இன்று மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த 5-வது நபரின் உடலை சுமார் 30 மணி நேரத்திற்கு பிறகு பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். இதையடுத்து 6-வது நபரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

Next Story