ஆபரேஷன் கஞ்சாவேட்டையில் 21 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆபரேஷன் கஞ்சாவேட்டையில் 21 பேர் கைது
கள்ளக்குறிச்சி
தமிழக போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது தொடர்ச்சியாக கடந்த 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 15 நாட்கள் ஆபரேஷன் கஞ்சாவேட்டை 4.0 நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் அறிவுரையின் பேரில் போலீசார் கடந்த 15 நாட்கள் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் கஞ்சா கடத்திய மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் ரூ.56 ஆயிரத்து 800 மதிப்புள்ள 5 கிலோ 700 கிராம் கஞ்சா மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா, சாராயம் விற்பனை போன்ற சமுதாயத்தை சீரழிக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுப்பதோடு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.