பஸ்கள் உள்பட 21 வாகனங்கள் பறிமுதல்


பஸ்கள் உள்பட 21 வாகனங்கள் பறிமுதல்
x

விதிமுறைகளை மீறியதாக ஆம்னி பஸ்கள் உள்பட 21 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

விதிமுறைகளை மீறியதாக ஆம்னி பஸ்கள் உள்பட 21 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

வாகன தணிக்கை

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு உரிமம் இல்லாமல் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் செல்வதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வடக்கிபாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகண்ணன் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் இரவு நேரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வாகனங்கள், உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட ஆம்னி பஸ்கள் உள்பட 21 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

அபராதம் விதிப்பு

வடக்கிபாளையத்தில் நடந்த சிறப்பு தணிக்கையில் உரிமம் இல்லாமல் இயங்கிய 2 ஆம்னி பஸ்கள் பிடிப்பட்டன. பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள், வேறு வாகனம் வரவழைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மதுரையில் இருந்து கோழிக்கோடு செல்லும் ஆம்னி பஸ்கள் வழக்கமாக கோபாலபுரம் வழியாக கேரளாவுக்கு செல்வது வழக்கம். ஆனால் உரிமம் இல்லாததால் வடக்கிபாளையம் வழியாக சென்றது தெரியவந்தது.

இதேபோன்று வரி செலுத்தாமல், உரிமம் இல்லாமல், அதிக பாரம் ஏற்றி கொண்டு சென்ற வாகனங்கள் என மொத்தம் 21 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 800 வரியும், ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 400 அபராதமும் வசூலிக்கப்பட்டது. மேலும் சில வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 150 அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதிமுறையை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

----

Reporter : V.MURUGESAN_Staff Reporter Location : Coimbatore - Pollachi - POLLACHI

1 More update

Related Tags :
Next Story