குமரியில் 2,100 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


குமரியில் 2,100 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x

குமரியில் 2,100 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,173 ஆகும். இதில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நோயின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது. எனவே இந்தநோயின் தீவிர தாக்கத்தில் இருந்தும், மரணத்தில் இருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது அத்தியாவசியமாகிறது. குமரி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 525 குழுக்கள், ஒவ்வொரு குழுவும் 4 இடங்களில் மொத்தம் 2,100 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட உள்ளனர். முதல், இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் 2-வது தவணை தடுப்பூசி போட்டு 6 மாதங்கள் ஆன சுகாதார பணியாளர்கள் (அரசு மற்றும் தனியார்), அரசு துறைகளைச் சார்ந்த முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை இந்த முகாமில் போட்டுக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். தடுப்பூசி போடாதவர்களுக்கு கொரோனா ஒரு உயிர்க்கொல்லி நோய். இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டால் அது ஒரு சாதாரண சளிக்காய்ச்சல்.

முககவசம் அணிவோம், தனிமனித இடைவெளியை காப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story