கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 22 பேர் கைது


கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 22 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 22 பேர் கைது

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் கஞ்சா விற்றதாக திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த சஞ்சய் (வயது 21), நெய்வேலி அஜய் (26), பண்ருட்டி தமிழரசன் (21), நடுவீரப்பட்டு ஆகாஷ், ஏழுமலை (32), சேத்தியாத்தோப்பு ஏழுமலை மனைவி தனலட்சுமி, ஸ்ரீமுஷ்ணம் வல்லரசு (22) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 480 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் புகையிலை பொருட்கள் விற்ற கடலூர் ஜெயபிரகாஷ், புதுச்சத்திரம் பச்சையம்மாள் (70), மந்தாரக்குப்பம் கோபாலகிருஷ்ணன் (42), ஸ்ரீமுஷ்ணம் குமரவேல் (46), பாரதிராஜா (27), சோழத்தரம் ராஜசேகர் (52), நெல்லிக்குப்பம் செந்தில்நாதன் (40), ஆவினங்குடி மோகன் (64), ராமநத்தம் வெங்கடேசன் (50), வேப்பூர் செல்வராஜ் (48), மணிவேல் (40), சிறுபாக்கம் பழனியப்பன் (55), திட்டக்குடி தமிழ்செல்வன் (55) உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story