சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
x

தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பயணிகளிடம் சோதனை நடைபெற்று வந்தது.

அப்போது, தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பயணி வைத்திருந்த கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த பையில் சுமார் 3.6 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதைதொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை கடத்தி வந்த ஜான் ஜுட் தவாஸ் என்ற பயணியை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 22 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட ஜானிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story