பலத்த காற்றுடன் மழையால் சென்னையில் 23 விமான சேவைகள் பாதிப்பு


பலத்த காற்றுடன் மழையால் சென்னையில் 23 விமான சேவைகள் பாதிப்பு
x

கோப்புப்படம் 

பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சென்னையில் 23 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

ஐதராபாத், டாக்கா, டெல்லி, மும்பை, பெங்களூரு, கவுகாத்தி, கோவா, கோவை, நாக்பூர், சிங்கப்பூர், கன்னூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை வந்த 12 விமானங்கள் பலத்த மழையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. வானிலை சீரானதும் ஒன்றன்பின் ஒன்றாக தறையிறங்கின.

அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்பட 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

1 More update

Next Story