ஊரப்பாக்கம் அருகே அரசு பஸ்சில் பெண்ணிடம் நூதன முறையில் 25 பவுன் நகை திருட்டு


ஊரப்பாக்கம் அருகே அரசு பஸ்சில் பெண்ணிடம் நூதன முறையில் 25 பவுன் நகை திருட்டு
x

ஊரப்பாக்கம் அருகே அரசு பஸ்சில் பெண்ணிடம் நூதன முறையில் 25 பவுன் நகை திருடப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் புஷ்பா (வயது 50), நேற்று முன்தினம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். இவர் தனது கைப்பையில் 25 பவுன் தங்க நகை வைத்திருந்தார். ஊரப்பாக்கம் அருகே செல்லும்போது திடீரென இவரது அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் சில்லரையை கீழே போட்டுள்ளார்.

பின்னர் கீழே விழுந்த சில்லரையை எடுத்து தருமாறு கூறியுள்ளார். சில்லரையை எடுத்து தருவதற்காக கீழே குனிந்தார். பின்னர் தனது கைப்பையை புஷ்பா சோதனை செய்தபோது அதில் இருந்த 25 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து புஷ்பா கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊரப்பாக்கத்தில் அரசு பஸ்சில் இருந்த பெண்ணிடம் நகைகளை திருடி கொண்டு மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story