தமிழ்நாட்டில் மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழ்நாட்டில் மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 30 Dec 2023 11:45 PM IST (Updated: 30 Dec 2023 11:58 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை,

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 777 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தவகையில், சென்னை மாவட்டத்தில் 15 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் கோவை மாவட்டங்களில் தலா 3 பேருக்கும், காஞ்சீபுரம், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, இன்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story