குமரி மாவட்டத்துக்கு 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை
இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஜனவரி மாதம் மூன்றாவது சனிக்கிழமை (20-ந் தேதி) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஜனவரி மாதம் மூன்றாவது சனிக்கிழமை (20-ந் தேதி) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். அதே சமயத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story