வடகிழக்கு பருவமழையில் வெள்ளத்தால் 29 பகுதிகள் பாதிக்கப்படும்


வடகிழக்கு பருவமழையில் வெள்ளத்தால் 29 பகுதிகள் பாதிக்கப்படும்
x

வடகிழக்கு பருவமழையில் வெள்ளத்தால் 29 பகுதிகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கி அலுவலர்களிடையே பேசுகையில், மாவட்டத்தில் வடகிழக்கு பருமழையின்போது, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக 29 பதற்றமான பகுதிகள்; கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப்பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் துணை ஆட்சியர் தலைமையில் பல்துறையினைச் சார்ந்த 12 அலுவலர்களைக் கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு 5 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் மாவடட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், 04329-228709 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.


Next Story