கோடியக்கரையில் மீன்பிடித்த மயிலாடுதுறை மீனவர்கள் 29 பேர் சிறைபிடிப்பு


கோடியக்கரையில் மீன்பிடித்த மயிலாடுதுறை மீனவர்கள் 29 பேர் சிறைபிடிப்பு
x

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த காலத்தில் அங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கி மீன் பிடித்து வருகின்றனர். இதனால் வேதாரண்யம் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சில ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கோடியக்கரையில் இருந்து சென்று பழைய கலங்கரை விளக்கம் அருகே சுமார் 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 29 மீனவர்கள் மற்றும் அவர்கள் வந்த 7 பைபர் படகுகளையும் புஷ்பவனம் மீனவர்கள் சிறைபிடித்து புஷ்பவனம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து கோடியக்கரை மீனவர் சங்கம் சார்பில் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து 29 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story