கல்குவாரியில், 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை


கல்குவாரியில், 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
x

கல்குவாரியில், 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருச்சி

துவரங்குறிச்சி:

மதுரையைச் சேர்ந்த முருகப்பெருமாள் என்பவருக்கு சொந்தமான ஆர்.ஆர். இன்ப்ரா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் கல்குவாரி திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த நாட்டார்பட்டி ஊராட்சியில் சீகம்பட்டி அருகே உள்ள குறத்திக்குட்டு என்ற மலைக்குன்று அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இரவு 9.30 மணிக்கு கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள் இருந்த அறையை பூட்டி 'சீல்' வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு மீண்டும் கல்குவாரிக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், 2-வது நாளாக சோதனையை மேற்கொண்டனர். அப்போது கல்குவாரியின் பல்வேறு பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த சோதனை நீடித்தது.


Next Story