ஓட்டேரியில் டீக்கடை ஊழியரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது


ஓட்டேரியில் டீக்கடை ஊழியரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது
x

ஓட்டேரியில் டீக்கடை ஊழியரை தாக்கி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 22), இவர் வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள ஓட்டேரி விரிவு பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள சாரங்கபாணி என்பவரது டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவசங்கர் டீக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சிவசங்கரை முதுகில் கத்தியால் குத்திவிட்டு டீக்கடை கல்லாவில் இருந்த ரூ.3 ஆயிரத்து 500-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அப்போது அக்கம் பக்கத்தினர் 3 பேரை பிடித்து ஓட்டேரி போலீசில் ஒப்படைத்தனர்.

இதில் ஒருவர் மட்டும் தப்பிச்சென்று விட்டார். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னையை சேர்ந்த விதன் (வயது 22), பரத் (20), சாம்ராஜ் (20), ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய ஓட்டேரி பகுதியை சேர்ந்த கரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story