கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது -மோட்டார் சைக்கிள், ஆட்டோ, செல்போன்கள் பறிமுதல்


கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது -மோட்டார் சைக்கிள், ஆட்டோ, செல்போன்கள் பறிமுதல்
x

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மோட்டார் சைக்கிள், ஆட்டோ, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது

மதுரை

வாடிப்பட்டி

வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சேர்வை, ஏட்டுக்கள் தனசேகரன், பாண்டியன் ஆகியோர் பாண்டியராஜபுரம் கல்லடிப்பட்டி சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளினை நிறுத்தி வாகன தணிக்கை செய்த போது திண்டுக்கல் மாவட்டம் ராமராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 35), தங்கப்பாண்டி (36) என்று கூறினர். ராஜ்குமார் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 1¼ கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அது போல் பழனி ஆண்டவர் கோவில் பகுதியில் நின்றிருந்த ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துமணி (29) என்பவர் ஆட்டோவை சோதனை செய்தபோது சீட்டின் பின்புறத்தில் 1¼ கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 2½ கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஆட்டோ, 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். ராஜ்குமார், தங்கப்பாண்டி, முத்துமணி ஆகியோரை கைது செயதனர்.


Related Tags :
Next Story