விம்கோநகர் ரெயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது


விம்கோநகர் ரெயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
x

விம்கோநகர் ரெயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

சென்னையில் உள்ள மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரிகளில் மீஞ்சூர், எளாவூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் ெசன்டிரலில் இருந்து மின்சார ரெயிலில் கல்லூரிக்கு வந்து சென்றனர். அப்போது 2 கல்லூரி மாணவர்களும் இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதி கொள்வார்கள்.நேற்று முன்தினமும் விம்கோநகர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்த 2 கல்லூரி மாணவர்களும் மோதிக்கொண்டனர். கல்வீசி தாக்கியதில் ரெயிலின் 3-வது பெட்டியில் உள்ள 4 ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இதில் குழந்தை உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநில கல்லூரியில் எம்.ஏ. பொருளாதாரம் 2-ம் ஆண்டு படிக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சர்வேஸ்வரன் (வயது 22), பி.எஸ்.சி. உயிரியல் 2-ம் ஆண்டு மாணவர் கிரிதரன் (19) மற்றும் 18 வயது மாணவர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநில கல்லூரி மாணவர் ஒருவரை தாக்கியதாக தெரிகிறது. இதற்கு பழி வாங்க மாநில கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் திருவொற்றியூர் விம்கோ நகர் ெரயில் நிலையத்தில் கத்தி, கல், மது பாட்டில்களுடன் காத்திருந்தனர். சென்டிரலில் இருந்து மின்சார ெரயில் விம்கோ நகர் ரெயில் நிலையம் வந்ததும், தயாராக நின்ற மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருந்த ெரயில் பெட்டி மீது கல்வீசி தாக்கியது தெரிந்தது.


Next Story