மின்னல் தாக்கி 3 பசுக்கள் சாவு


மின்னல் தாக்கி 3 பசுக்கள் சாவு
x

மின்னல் தாக்கி 3 பசுக்கள் செத்தன.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் ஒன்றியம் 15-வது வார்டு கவுன்சிலர் சந்திராமூர்த்தி. கீழப்பட்டியை சேர்ந்த இவர் குடும்பத்தினருடன் சேர்ந்து, பசுக்களை வளர்ந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 3 பசுக்களை தோட்டத்திலேயே கட்டி வைத்து விட்டு வீடு திரும்பியுள்ளனர். நேற்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, 3 பசுக்களும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் பாதர்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சின்னதம்பி, உப்பிலியபுரம் வருவாய் ஆய்வாளர் கீதா, எரகுடி கால்நடை மருத்துவர் ஆனந்த், உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின்போது, பசுக்கள் கட்டியிருந்த இடத்தின் அருகில் இருந்த வேப்பமரத்தை மின்னல் தாக்கியதில், 3 பசுக்களும் பரிதாபமாக இறந்ததும், அதில் ஒன்று சினைப்பசு என்பதும் தெரியவந்தது. கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திலேயே உடற்கூறு பரிசோதனை செய்ததையடுத்து, 3 பசுக்களும் புதைக்கப்பட்டன.


Next Story