தீ மிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த 3 பக்தர்கள் காயம்


தீ மிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த 3 பக்தர்கள் காயம்
x

சென்னை பெரம்பூரில் தீ மிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த 3 பக்தர்கள் காயமடைந்தனர்.

சென்னை

சென்னை பெரம்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தீ மிதி திருவிழா நடந்தது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அப்போது பெரம்பூர் நெட்டில் கார்டனைச் சேர்ந்த பிரேம்நாத் (வயது 32), பாலா(45), கொடுங்கையூரைச் சேர்ந்த மகி (35) ஆகியோர் தீ மிதித்த போது தீக்குண்டத்தில் தவறி விழுந்தனர். இதில் தீக்காயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தீ மிதி விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story