சென்டிரல் ரெயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்டிரல் ரெயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பத்மாகர் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நடைமேடை 5-ல் வந்து நின்ற பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனையிட்டனர். அதில் சந்தேகப்படும்படியாக இருந்த வாலிபரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் சைதாப்பேட்டையை சேர்ந்த பிரதாப் (வயது 23) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story