ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.3½ லட்சம் மோசடி
கடலூரில் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்த முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்
கடலூர் பீச் ரோடு என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 65). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (62) தனது மகள் திருமணத்திற்காக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் 2 தவணையாக 3½ லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை சம்பத்குமார், பாஸ்கரனிடம் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். பிறகு சம்பத்குமார் தனியார் வங்கியில் பணம் எடுத்துக்கொள்ளும் வ வகையில் காசோலை கொடுத்தார். ஆனால் அந்த காசோலையை பாஸ்கரன் வங்கியில் கொடுத்த போது, அதில் பணம் இல்லை என்று தெரிந்தது. இது பற்றி பாஸ்கரன் கடலூர் தேவனாம்பட்டினம் போலீசில், தன்னை சம்பத்குமார் மோசடி செய்து விட்டதாக புகார் தெரிவித்தார். அதன்பேரில் சம்பத்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story