குற்ற வழக்கில் சிக்கிய 3 வக்கீல்கள் தொழில் செய்ய தடை - பார் கவுன்சில் அதிரடி


குற்ற வழக்கில் சிக்கிய 3 வக்கீல்கள் தொழில் செய்ய தடை - பார் கவுன்சில் அதிரடி
x

குற்ற வழக்கில் சிக்கிய 3 வக்கீல்கள் தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் பிரபு மீது விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்த வக்கீல் ரகுமான்கான் மீது சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டாலம்பட்டி போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை எண்ணூரை சேர்ந்த வக்கீல் தினேஷ், கடலூர் சிறை அதிகாரி வீட்டுக்கு தீ வைத்து, அவரை கொலை செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டின் தன்மையின் அடிப்படையில், 3 பேரையும் வக்கீல் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பார் கவுன்சிலில் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.


Next Story