கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x

கஞ்சா விற்ற 3 பேர் கைது

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தீவிர ேதடுதல் வேட்ைட

பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரிதிவிராஜ் சவுகான் மேற்பார்வையில் பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

3 பேர் கைது

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த செல்வம், சேதுபாவாசத்திரம் பிள்ளையார் திடலை சேர்ந்த மனோஜ், பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராம்குமார் ஆகியோர் என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story