தங்க சங்கிலி பறித்த 3 பேர் கைது


தங்க சங்கிலி பறித்த 3 பேர் கைது
x

தனியார் நிறுவன ஊழியரிடம் தங்க சங்கிலி பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர், நத்தம் அருகே விளாம்பட்டி பிரிவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள், வெங்கடேசன் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் அச்சம்பட்டியை சேர்ந்த அழகுராஜா (21), ராஜீவ்காந்தி (37) மற்றும் 17 வயது சிறுவன் என்று தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த தங்கசங்கிலி, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story