திருத்தணி அருகே கல்குவாரி மேலாளரை மிரட்டிய 3 பேர் கைது


திருத்தணி அருகே கல்குவாரி மேலாளரை மிரட்டிய 3 பேர் கைது
x

திருத்தணி அருகே கல்குவாரி மேலாளரை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் சூர்யநகரம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் மேலாளராக முருகன் (வயது 40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (50), ரமணாபிரசாத் (50), உமாபிரசாத் (55) உள்ளிட்ட 5 பேர் கல்குவாரிக்கு நேரில் சென்று அங்கிருந்த மேலாளர் முருகன் மற்றும் ஊழியர்களிடம் மாமூல் கொடுத்தால் தான் கல்குவாரி நடத்த முடியும் எனக்கூறி ஆயுதங்களுடன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கல்குவாரி மேலாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில், திருத்தணி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, லோகநாதன், ரமணாபிரசாத், மற்றும் உமாபிரசாத் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story