சமையல் தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது


சமையல் தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது
x

சமையல் தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் மேலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). சமையல் தொழிலாளியான இவர், காவிரி ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டு அம்மாமண்டபத்தில் தங்கியிருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி அம்மா மண்டபத்தில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த இவர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரமேசுக்கு இரண்டு மனைவிகள். இதில் முதல் மனைவி சுதா ஈரோட்டில் தனது மகளுடன் உள்ளார். இரண்டாவது மனைவி ஆனந்தி ஸ்ரீரங்கத்தில் தனது மகனுடன் உள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் போலீசார் அம்மாமண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது தூங்கிக் கொண்டிருந்த ரமேஷை ஒருவர் அரிவாளால் வெட்டியதும், அருகில் 2 பேர் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதில் ெசன்னையில் பதுங்கி இருந்த 3 பேரையும், தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கருமண்டபம் பகுதியை சேர்ந்த பாபு(30), லால்குடி வடுகர்பேட்டையை சேர்ந்த முகமது ஆரிப்(19), சேலத்தை சேர்ந்த தனுஷ்(27) என்பது தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று ரமேஷிடம், பாபு என்ற கருமண்டபம் பாபு 500 ரூபாய் கொடுத்து மது வாங்கி வர சொன்னதாகவும், ஆனால் ரமேஷ் ஒரு குவார்ட்டர் பாட்டிலை மட்டும் கொடுத்துவிட்டு, மீதி பணம் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. அதைக்கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாபு, முகமது ஆரிப் மற்றும் தனுஷ் ஆகியோருடன் வந்து ரமேஷை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Next Story