மகளை கர்ப்பிணியாக்கிய லாரி டிரைவர் உள்பட 3 பேர் கைது


மகளை கர்ப்பிணியாக்கிய லாரி டிரைவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2023 11:25 PM IST (Updated: 27 Sept 2023 11:26 PM IST)
t-max-icont-min-icon

மகளை கர்ப்பிணியாக்கிய லாரி டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்த 37 வயதான லாரி டிரைவர் ஒருவர் 12-ம் வகுப்பு படிக்கும் தனது மகளை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி 7 மாதம் கர்ப்பிணியாகியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அவரது கர்ப் பத்தை கலைக்க அவரது தாய் ராயம்புரம் கிராமத்தில் உள்ள ஒரு மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். இதில் கர்ப்பம் கலைந்த நிலையில் இறந்த ஆண் சிசுவை வீட்டின் பின்புறம் சாக்கு பையில் வைத்து புதைத்துள்ளனர். இந்த நிலையில் மாணவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். மாணவியை பரிசோதித்த டாக்டர் இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் செல்வி அகஸ்தியர் என்பவர் செந்துறை கிராம நிர்வாக அலுவலர் வாழவந்தானிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பின்புறம் இறந்த நிலையில் இருந்த 7 மாத சிசுவை கிராம நிர்வாக அலுவலர் வாழவந்தான் முன்னிலையில் போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து வாழவந்தான் கொடுத்த புகாரின் பேரில், செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்ப்பத்திற்கு காரணமான மாணவியின் தந்தை, இதனை மறைத்த அவரது தாய் மற்றும் கருவை கலைக்க மாத்திரை கொடுத்த மருந்தக உரிமையாளர் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story