மடிப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் - பெண் தரகர் உள்பட 3 பேர் கைது


மடிப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் - பெண் தரகர் உள்பட 3 பேர் கைது
x

மடிப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய பெண் தரகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடந்து வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த குடியிருப்பை கண்காணித்தபோது அங்கு பாலியல் தொழில் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் தரகர் ஜான்சி என்ற பூர்ணிமா (வயது 32), சூர்யா என்ற ராஜா (24), குமார் (34) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 8 பெண்கள் மீட்கப்பட்டனர்.

இதில் பெண் தரகர் ஜான்சி என்ற பூர்ணிமா மீது ஏற்கனவே பாலியல் தொழில் குற்றத்துக்காக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2 முறை குண்டர் சட்டத்தில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். சூர்யா என்ற ராஜா மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.


Next Story