குன்றத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்ற குறும்பட இயக்குனர் உள்பட 3 பேர் கைது


குன்றத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்ற குறும்பட இயக்குனர் உள்பட 3 பேர் கைது
x

குன்றத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்ற குறும்பட இயக்குனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

குன்றத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்- இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாய பாரத் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை மடக்கி சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் விசாரித்தபோது பிடிபட்ட நபர் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆகாஷ் (24) என்பது தெரியவந்தது. கல்லூரி படிப்பை பாதியில் முடித்த இவர் கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இவரது நண்பர்கள் சஞ்சீவ் (25), சஞ்சய் (24) ஆகியோரும் கல்லூரி படிப்பை பாதியில் முடித்தவர்கள். இவர்கள் 3 பேரும் தனித்தனியாக பணிபுரிந்து வந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்யவும், கஞ்சாவை புகைக்கவும் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. இதில் சஞ்சய் குறும்படங்களை இயக்கியிருப்பதும் தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் வடமாநிலங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து இந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள் போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story