வாலிபரை தாக்கி மிரட்டிய 3 பேர் கைது


வாலிபரை தாக்கி மிரட்டிய 3 பேர் கைது
x

விக்கிரமசிங்கபுரம் அருகே வாலிபரை தாக்கி மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 39). இவர் கடந்த 23-ந் தேதி அவரது நண்பருக்கு சம்பள பணம் கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது சிவந்திபுரத்தை சேர்ந்த சிவன்பாண்டி (33), முத்துக்குமார் (22) ஆகிய இருவரும் ஒர்க் ஷாப் அருகே நின்று அசுத்தம் செய்து கொண்டிருந்ததை மாரியப்பன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் சிறுவன் உள்பட 3 பேர் சேர்ந்து மாரியப்பனை அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாரியப்பன் விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தார்.


Next Story