நெகமம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது


நெகமம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் அருகே மது போதையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அருகே மது போதையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுபோதை வாலிபர்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் டிரைவராக செந்தில்குமார், கண்டக்டராக உதயகுமார் ஆகியோர் இருந்தனர். அப்போது அந்த பஸ்சில் 2 வாலிபர்கள் குடிபோதையில் ஏறினார்கள். பஸ் புறப்பட்டதில் இருந்து அவர்கள் 2 பேரும் ஆபாச வார்த்தைகளால் பேசிக் கொண்டு இருந்தனர்.

இதனால் பஸ்சில் இருந்து சக பயணிகள் முகம் சுழித்தனர். இதனை கவனித்த கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகியோர், மதுபோதையில் இருந்தவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதை நிறுத்திவிட்டு, பஸ்சில் அமைதியாக பயணிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

வாக்குவாதம்

ஆனால் அவர்கள் 2 பேரும் தொடர்ந்து ஆபாசமாக பேசினர். பஸ் நெகமம் அருகே வந்த போது, டிரைவர் மற்றும் கண்டக்டர், அந்த 2 பேரையும் பஸ்சில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருப்பூர் சேர்ந்த ஒருவரை செல்போன் மூலம் நெகமம் பகுதிக்கு வரும்படி அழைத்தனர். இதையடுத்து அங்கு வந்த நபர் உள்பட 3 பேரும் மோட்டார் சைக்கிள் மூலம் அங்கிருந்து புறப்பட்டு நெகமம் பழைய பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு வந்த அந்த அரசு பஸ்சை வழிமறித்த 3 பேரும் கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பஸ் கண்ணாடி உடைப்பு

திடீரென அவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்தனர். இதனால் கண்ணாடி சேதம் ஆனது. இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது. இதுபற்றி டிரைவர் மற்றும் கண்டக்டர் நெகமம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ்சின் கண்ணாடியை சேதப்படுத்தியதாக திருப்பூர் சஞ்சய் நகரை சேர்ந்த தனுஷ்குமார் (வயது 22) ,திருப்பூர்- ஊத்துக்குளி மெயின் ரோட்டை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (24) மற்றும் திருப்பூர் வஞ்சிபாளையத்ைத சேர்ந்த பக்ருதீன் ஆகியோரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story