மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது


மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது
x

மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

பேரையூர்,

பேரையூர் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது பேரையூரை சேர்ந்த காளிராஜ் (வயது 41) என்பவர் விற்பனை செய்வதற்காக 5 மதுபாட்டில்கள் வைத்திருந்த போது ரோந்து சென்ற போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் மதுபாட்டில் விற்று வைத்திருந்த ரூ.500-ஐ பறிமுதல் செய்து காளிராஜை கைது செய்தனர். சிலைமலைபட்டியை சேர்ந்த மதனபாண்டியன் (38) என்பவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் கணவாய்பட்டியை சேர்ந்த ஒச்சாதேவர் (35) என்பவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை சேடபட்டி போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story