மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

ஆலங்குடி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடி அருகே மதுவிற்று கொண்டிருந்த மேலகரும்பிரான் கோட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது 43), ராஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (27) மற்றும் ஆலங்குடி டாஸ்மாக் கடை அருகே மதுவிற்ற அண்ணா நகரை சேர்ந்த சேகர் (59) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 39 மது பாட்டில்கள் மற்றும் ரூ.3,960 பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story