மது- புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


மது- புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x

மது- புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சின்னம்ம நாயக்கன்பட்டி, ரங்கநாதபுரம் பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் மாயனூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னம்மநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்த மேகலா (வயது 35), ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜமுனா (35) ஆகிய 2 பேர் தங்கள் வீட்டின் அருகே மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், சித்தலவாய் மஞ்சமேடு பகுதியை சேர்ந்த திருமலைசாமி (33) என்பவர் அவரது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தார். இதையடுத்து திருமலைசாமியை மாயனூர் போலீசார் கைது செய்தனர்.


Next Story