புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x

திண்டிவனம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கிடங்கல் - 1 பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக கூறி அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் புகையிலை பொருட்கள் விற்றதாக வைரபுரத்தை சேர்ந்த வசந்தா (60), கீழ்மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் (46) ஆகியோரை வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story