பெரும்பாக்கம், புழலில் 3½ கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது


பெரும்பாக்கம், புழலில் 3½ கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
x

பெரும்பாக்கம், புழலில் 3½ கிலோ கஞ்சாவுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1½ கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அவர், சென்னை பழைய திருமங்கலம் பெரியார் தெருவை சேர்ந்த தினேஷ்குமார் என்ற மேத்திவ் (வயது 29) என தெரிய வந்தது. அவரை கஞ்சாவுடன் பெரும்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாதவரம் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்த செங்குன்றத்தை சேர்ந்த சரத்குமார்(23), குணா(22) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story