திருத்தணி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு


திருத்தணி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x

திருத்தணி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த மாலைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 40). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி உஷா (33). இவர்கள் இருவரும் நேற்று தனது உறவினர்களுடன் உஷாவின் தங்கை நவலட்சுமி திருமணத்திற்கு திருத்தணிக்கு வந்துள்ளனர்.

பின்னர் திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக திருத்தணி அண்ணா பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென உஷாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உஷா சங்கிலியை பிடித்து கொண்டு கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு கணவர் மற்றும் உறவினர்கள் சுதாரிப்பதற்குள் அந்த மர்ம நபர்கள் சங்கிலி பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து உஷா திருத்தணி போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story