தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்ற 3 ரவுடிகள் கைது


தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்ற 3 ரவுடிகள் கைது
x

தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்ற 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை தண்டையார்பேட்டை சுப்புராயன் தெரு, தியாகராய பூங்கா பின்புறம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த 3 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் பிடிப்பட்டவர்கள் வியாசர்பாடி பி.கல்யாணபுரத்தைச் சேர்ந்த விக்கி (வயது 27), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரேம்குமார் (22), மீஞ்சூரைச் சேர்ந்த பாலாஜி (27) என்பதும், ரவுடிகளான இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story