வாலிபர் எரித்து கொலை:குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு


வாலிபர் எரித்து கொலை:குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
x

சிவகங்கை அருகே கண்மாய்க்குள் வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை அருகே கண்மாய்க்குள் வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு கேமரா

சிவகங்கையை அடுத்து உள்ள நென்மேனி கிராமத்தில் உள்ள உடைய நேந்தல் கண்மாயில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முழுமையாக எரிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவரை 2 நாட்களுக்கு முன்பாக கொலை செய்து அங்கு கொண்டு வந்து போட்டு எரித்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

சம்பவம் நடைபெற்ற பகுதி ரோட்டை விட்டு மிக ஒதுக்குப் புறமாக உள்ள பகுதியாகும். இந்த பகுதியை பற்றி முழுமை யான அடையாளம் தெரிந்தவர்கள் தான் இங்கு உடலை கொண்டு வந்து போட்டு இருக்க முடியும். இந்த இடத்தை ஒட்டியுள்ள பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள 2 கண்காணிப்பு கேமராவில் பதிவான விவரங்களை சேகரித்து வருகிறோம்.

3 தனிப்படை

கொலை செய்யப்பட்டு இறந்தவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதன் மூலம் அவரது விரோதிகள் யார் என்பதை கண்டுபிடித்து விடலாம். இதற்காக 3 தனிப்படை அமைக்கப் பட்டு உள்ளது. இதில் சிவகங்கை தாலுகா இன்ஸ் பெக்டர் முத்து மீனாட்சி தலைமையில் ஒரு தனிப்படையும், ராமச ்சந்திரன் தலைமையில் ஒரு தனிப்படையும், சப்-இன்ஸ் பெக்டர் சபரிதாசன் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது இவர்கள் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 20-ல் இருந்து 50 வயது வரை காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள் சேகரித்து வருகிறார்கள். எனவே விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story