செந்தாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்


செந்தாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்
x

நேற்று 12-ம் வகுப்பு தேர்வு எழுத சென்ற நிலையில் மாணவிகள் மாயமானதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 3 மாணவிகள் நேற்றைய தினம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற நிலையில், அவர்கள் மாயமானதாக சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு எழுதச் சென்ற 3 மாணவிகள் ஒரே சமயத்தில் காணாமல் போனதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story