குமரியில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு


x

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குமரியில் மழை நீடித்ததால் பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.


Next Story