மதுபாட்டில்கள் விற்ற 3 பெண்கள் கைது
மதுபாட்டில்கள் விற்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி
வாணாபுரம்,
பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரிஷிவந்தியம் அருகே ஏந்தல் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி கோவிந்தம்மாள் (வயது 45), சுப்பராயன் மனைவி வீரம்மாள் (65) ஆகியோர் தனித்தனியாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் இளையனார்குப்பத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மனைவி மஞ்சுளா (42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து மொத்தம் 22 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story